கலை, கலாசாரம்

மோடியின் பதவியேற்பில் பங்கேற்வுள்ளார் ஜனாதிபதி ரணில் !

இந்தியப் பிரதமராக மீண்டும் தெரிவான நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில், நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

, மோடியின் பதவியேற்பில் பங்கேற்வுள்ளார் ஜனாதிபதி ரணில் !

Back to top button