கலை, கலாசாரம்
மொனராகலையில் அனுரகுமார ஆதரவாளர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

[ad_1]
மொனராகலையில் நேற்று (13) காலை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு திரும்பிக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நால்வர் புத்தல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Lankafire







