கலை, கலாசாரம்

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா!

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா!

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று(22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில், மரபுசார், உணவு, திருவிழா

மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் Dr.தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் Drஅ.அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்,VAROD நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Back to top button