கலை, கலாசாரம்
முல்லைத்தீவு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்
முல்லைத்தீவு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்

முல்லைத்தீவு(Mullaitivu) கடற்கரைப்பகுதியில் நேற்றையதினம்(22) மிதந்து வந்த மர்மப்பொருளால் கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் நேற்றையதினம் மர்மபொதி ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கடற்றொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மர்ம பொதியினை எடுத்து சோதனை நடத்தியதில் அதில் 14.7 கிலோகிராம் கோடெக்ஸ் எனும் வெடிபொருள் இருந்துள்ளது.இதனையடுத்து குறித்த இடத்தில் இருந்து மீட்டு முல்லைத்தீவு பொலிஸார் வெடிபொருளை கொண்டுச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







