கலை, கலாசாரம்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்கள் மீட்பு!

[ad_1]
அம்பன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள், பலத்த ஆற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிசார் மற்றும் உயிர்காப்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.
நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து மொரகொல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நீர்த்தேக்கத்தின் நீரை கட்டுப்படுத்தியுள்ளனர்.
பின்னர் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய இரு பெண்களையும் மீட்டு முதலுதவி செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் 20 மற்றும் 25 வயதுடைய கொங்கஹவெல மற்றும் ககம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
Lankafire








