இலங்கை செய்திகள்

யாழ். தையிட்டி விகாரையை இடிப்பதாக மிரட்டிய எம்.பி சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து

யாழ். தையிட்டி விகாரையை இடிப்பதாக மிரட்டிய எம்.பி சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரையை இடிப்பதாக மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கைது செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கருத்துகள், அரசியலமைப்பை மீறுவதாகவும், அரசாங்கம் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புறக்கணித்தால், அது வன்முறையை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்

இந்த நிலையில், அத்தகைய சூழ்நிலையில் உடனடியாகவும் தீர்க்கமாகவும் செயல்படத் தவறினால், அரசாங்கம் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Back to top button