பெருந்தோட்ட மக்கள் வாழ்வை உயர்த்தும் முயற்சிகள்
பெருந்தோட்ட மக்கள் வாழ்வை உயர்த்தும் முயற்சிகள்

தொண்டமான், திகாம்பரம் ஆகியோரின் இராசதானியாக இருந்த மலையகத்தைப் புனரமைப்போம். பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த திட்டங்களைச் செயற்படுத்துவோம் என பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (18) நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி ஊடகங்களுக்குக் திசாநாயக்க மீது பெருந்தோட்ட மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கும் பெருந்தோட்ட மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.
பெருந்தோட்ட பகுதிகளில் தமிழர்களைப் போன்று சிங்களம், முஸ்லிம் சமூகத்தினரும் வாழ்கிறார்கள். இருப்பினும் தமிழர்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் பல காணப்படுகின்றன.
தொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் இராசதானியாகவே பெருந்தோட்ட பகுதி இதுவரையில் காணப்பட்டது. இருப்பினும் அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. பெருந்தோட்ட பகுதிகளை புனரமைப்போம் என்றார்.








