கலை, கலாசாரம்
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் !

நாட்டுக்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்திகளில் இன்னும் தன்னிறைவு அடையவில்லை என,பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அமைச்சர் :2021 இல், உரப்பிரச்சினை ஏற்பட்ட போது சோளம் உற்பத்தி வீழ்ச்சியுற்றது.இதனால், கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன பாதிக்கப்பட்டன.
நாட்டின் சோளத் தேவை ஆறு இலட்சம் மெற்றிக் தொன்களாக உள்ளன.
இந்நிலையில்,2023 பெரும் போகத்தில் சோள விளைச்சல் 2,21,249 மெற்றிக்தொன்னாக அதிகரித்தது.
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில் 160 இளைஞர் விவசாயத் தொழில்முனைவோர் கிராமங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு 1,60,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.
, முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் !









