கலை, கலாசாரம்

மின்னல் தாக்கி விவசாயி பலி !

மொனராகலை – எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயலொன்றில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியே மின்னல் தாக்கி நேற்று (3) உயிரிழந்துள்ளார்.

எத்திமலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயியொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மேலும் மூன்று நபர்களுடன் இணைந்து வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கடும் மழை காரணமாக அருகில் இருந்த மரமொன்றிற்கு அடியில் நின்றுகொண்டிருந்த போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர் எத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

, மின்னல் தாக்கி விவசாயி பலி !

Back to top button