கலை, கலாசாரம்

மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!

மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!

கேகாலை, மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலிகல்ல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!

மாவனெல்லை , வெலிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தென்னந்தோப்பில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button