கலை, கலாசாரம்

மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு!

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (21) மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் செவனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு!

உயிரிழந்தவர் வெலியார, செவனகல பகுதியைச்  சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

Back to top button