கலை, கலாசாரம்

மிதிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம்… இரண்டு சந்தேகநபர்கள் கைது!

[ad_1]

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவியப்பன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) புஷ்பராம உப முகாமின் அதிகாரிகளினால் திகரெத்த மற்றும் ஹதபெலென பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 38 மற்றும் 30 வயதுடைய கோட்டே மற்றும் அங்குலுகஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளுக்காக மிதிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ​​சந்தேகநபர்களிடம் இருந்து 11 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கியதுடன், மற்றையவர் அவர்களை ஏற்றிச் செல்வதற்கு முச்சக்கர வண்டியை ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[ad_2]
Lankafire

Back to top button