கலை, கலாசாரம்
மாத்தளை மருத்துவமனையில் போலி மருத்துவர் வெளிச்சம்!
மாத்தளை மருத்துவமனையில் போலி மருத்துவர் வெளிச்சம்!

மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமணிந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபரொருவர் இன்று வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி ரக்வான பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் சுமார் இரண்டு வார காலமாக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமணிந்திருந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








