மாடுகளை சட்டவிரோதமாக லொறியில் ஏற்றிச் சென்ற இளைஞன் கைது !

களுத்துறை, புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மூன்று மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, பண்டாரகமை, அட்டுளுகம பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், அங்குருவாத்தோட்ட, புளத்சிங்கள மற்றும் அகலவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் திருடப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, மாடுகளை சட்டவிரோதமாக லொறியில் ஏற்றிச் சென்ற இளைஞன் கைது !








