கலை, கலாசாரம்

மலையகத்தின் சில பகுதிகளில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!

மலையகத்தின் சில பகுதிகளில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையையடுத்து ஏற்பட்ட மண்சரிவினால் மலையகத்தின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த  முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மலையகத்தின் சில பகுதிகளில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!

பதுளை – பசறை வீதியின் 13ஆம் கட்டை, ஹப்புத்தளை – பெரகல வீதி, பதுளை – பண்டாரவளை வீதியின் பால் சபைக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள வீதிகளில் போக்குவரத்தே பாதிக்கப்பட்டுள்ளது.

பெய்து வரும் கன மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button