மலசல குழி பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு
மலசல குழி பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் மலசல கூட குழி நிர்மாணப் பணியின்போது தவறி விழுந்து குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்தார்.

மலசல கூட குழி நிர்மாண வேலைகளில் இருவர் ஈடுபட்டிருந்தவேளை, அந்த இருவரும் தவறி விழுந்துள்ளனர்.
தவறி விழுந்தவர்களில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன், 42 வயதுடைய மற்றொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் தீவிர சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளம் குடும்பஸ்தரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணை நடவடிக்கையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணம் நேர்ந்த காரணம் தொடர்பில் மேலும் அறிவதற்காக கொழும்பில் உள்ள பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு சடலத்தின் சில பகுதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மற்றும் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸ் தடயவியல் பிரிவினர் (SOCO) மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.








