கலை, கலாசாரம்
மருதானையில் இடம்பெற்ற கொலை… இளைஞன் ஒருவர் அதிரடி கைது!

[ad_1]
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவனாம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு (25) இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இந்தக் குற்றச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Lankafire








