கலை, கலாசாரம்
வெளிமடை பெரலந்த வீதியில் மயிரிழையில் தப்பிய பயணிகள்
வெளிமடை பெரலந்த வீதியில் மயிரிழையில் தப்பிய பயணிகள்

வெளிமடை பெரலந்த வீதியில் மயிரிழையில் தப்பிய பயணிகள்
பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நேற்று மாலை (28) வெளிமடை பெரலந்த வீதியில் பயணித்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் பின்புற இரண்டு சக்கரங்களும் ஒரேடியாக கழண்டு விலகி சென்றமையினால் பாரிய விபத்து ஒன்று பேருந்து சாரதியினால் தடுக்கப்பட்டுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து பயணிக்கும் போது பேருந்தில் 20 பேர் வரை இருந்ததாகவும் பேருந்தை சாரதி நிறுத்தாவிட்டால் பாரிய பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளாகி இருக்க கூடும் எனவும் பேருந்தில் பயணித்தவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பேருந்தின் சாரதிக்கு தங்களது பாராட்டுக்களையும் மக்கள் தெரிவிக்கின்றனர்.









