இலங்கை செய்திகள்

மத்திய வங்கி நவம்பரில் 327 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு!

மத்திய வங்கி நவம்பரில் 327 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு !

கடந்த நவம்பரில் இலங்கை மத்திய வங்கி உள்ளூர் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 327 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத்தின் பின்னர் ஒரே மாதத்தில் மத்திய வங்கியின் மிகப்பெரிய அமெரிக்க டொலர் கொள்வனவு இதுவாகும்.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி நவம்பரில் 327 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு

இந்த கொள்வனவுடன், 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலப்பகுதியில் உள்ளூர் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்த டொலர்கள் 2,797.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், மத்திய வங்கி சந்தையில் 160.5 மில்லியன் டொலர்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.

அதன்படி, மத்திய வங்கி நிகரமாக கொள்வனவு செய்த அமெரிக்க டாலர்களின் மொத்தத் தொகை 2,636.9 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button