கலை, கலாசாரம்

மதுபோதையில் ரயிலை செலுத்திய சாரதி !

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி இன்று (30) முற்பகல் 10.40 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த ரயிலின் சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு அமைதியற்ற வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சாரதி, கண்டி நகருக்கு அருகில் சுதுஹும்பொல என்ற இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடிய போது ரயிலில் இருந்த பயணிகள் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

இந்நிலையில் உதவி சாரதியை பயன்படுத்தி ரயில், கண்டி ரயில் நிலையம் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், மதுபோதையில் இருந்த ரயில் சாரதியை, ரயில் போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடைய வேண்டும் என்ற போதிலும், மதியம் 2.30 மணிக்கே ரயில் நிலையத்தை வந்தடைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

, மதுபோதையில் ரயிலை செலுத்திய சாரதி !

Back to top button