கலை, கலாசாரம்

மண்டூர் 13 இல் சிடாஸ் அமைப்பின் அனுசரணையில் பெற்றோர்களுக்கான உள வலுவூட்டல் செயற்பாடு

(சித்தா)

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு சிடாஸ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் மாத இறுதியில் மாணவர் – பெற்றோர்களுக்கான உள வலுவூட்டல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் 2024.07.07 ஞாயிறு அன்று காலை 10.00 மணியளவில் உள வலுவூட்டல் செயற்பாடுகள் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பெற்றோர் – மாணவர்களுடன் பிரதி அதிபர், வளவாளர்கள், சிடாஸ் மட்டக்களப்பு  அமைப்பின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

முதலில் மேலதிக வகுப்புகள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இம்மேலதிக வகுப்புகளின் கற்பித்தல் முறையானது கற்றலை மேம்படுத்த உதவுவதாக மாணவர்களும் தமது பிள்ளைகளில் கற்றல் ஆர்வம், நம்பிக்கை என்பன மேம்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து உள வலுவூட்டும் விளையாட்டுகளும் மேற்கொள்ளப்பட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் இணைந்து விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அச்செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. 

இச்செயற்பாடுகளில் வித்தியாலய பிரதி அதிபர் திரு.சோமசுந்தரம் தேவநேசன் அவர்களும் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் அங்கத்தவர்களான திரு.முத்துராஜா புவிராஜா, திரு.கந்தையா ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்

 

, மண்டூர் 13 இல் சிடாஸ் அமைப்பின் அனுசரணையில் பெற்றோர்களுக்கான உள வலுவூட்டல் செயற்பாடு

Back to top button