கலை, கலாசாரம்

இன்று அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் !

நாடளாவிய ரீதியில் இன்று அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் முதல் வழக்கம் போன்று அதிபர், ஆசிரியர்கள் கடமைக்குத் திரும்புவர் என நேற்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

, இன்று அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் !

Back to top button