மிதிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு… இருவர் காயம்!

[ad_1]
மாத்தறை – மிதிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவியப்பன பிரதேசத்தில் உள்ள மீன் சந்தையில் இன்று (19) காலை இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளான மீன் கடையின் உரிமையாளர் மற்றும் கடைக்கு வந்த மேலும் இரு நபர்களும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், மீன் மார்க்கெட் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழ்ந்தவர் கோவியப்பன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகர் ஒருவரின் கட்டளையின் பேரில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Lankafire








