கலை, கலாசாரம்

மட்டக்களப்பில் சிறுமியைத் தாக்கிய சிறிய தாய் கைது !

மட்டக்களப்பு வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய குற்றத்தில் அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தநிலையில் குறித்த பெண் கால்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இந்தநிலையில், தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாய், அவரது தந்தையை பிரிந்து பணிப் பெண்ணாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியின் தந்தை மறுமணம் செய்து கொண்ட நிலையில் சிறுமியின் சிறிய தாய் அவரை தாக்கியுள்ளார்.

மேலும், குறித்த சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

, மட்டக்களப்பில் சிறுமியைத் தாக்கிய சிறிய தாய் கைது !

Back to top button