கலை, கலாசாரம்
போதைப்பொருள் விற்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

[ad_1]
ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
59 வயதுடைய நபரொருவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கல்கிசை பட்டோவிட்ட பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
[ad_2]Lankafire







