கலை, கலாசாரம்

போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டு மக்களின் உடல் பருமன் அதிகரிப்பு : சுகாதார அமைச்சின் செயலாளர் !

போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

நாட்டில் சுமார் 48 சதவீதமான பெண்கள் அதிக எடையுடனும், 33.3 சதவீதமான ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடனும் உள்ளார்கள்.

சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செயற்பாடு குறைவாக உள்ளது. அத்துடன், அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல் குறைந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் தங்கள் நோய்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், நாட்டின் முதியவர்களில் 42 சதவீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிபிட்டுள்ளார்.

, போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டு மக்களின் உடல் பருமன் அதிகரிப்பு : சுகாதார அமைச்சின் செயலாளர் !

Back to top button