போதகர் ஜெரோமை தாக்கிய மக்கள்; நாவலபிட்டியில் பதற்றம்…
போதகர் ஜெரோமை தாக்கிய மக்கள்; நாவலபிட்டியில் பதற்றம்...

போதகர் ஜெரோமை மக்கள் நையப்புடைத்தனர் என்கிறவகையில் போலியான செய்தி பகிரப்பட்டு பரப்பரப்பை கிளப்பியுள்ளது.
உண்மையில் ,நாவலப்பிட்டியில் சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, வருகை தந்த போது போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலையே ஏற்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்துக்கு பதிலாக போதகர் ஜெரோம், ஒரு மத தலத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே கிராம மக்கள், ஜெரோமின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் போதகர் ஜெரோம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக, பௌத்த மத நிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில், போதகர் ஜெரோம் பெர்ணான்டோ, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








