பொலிஸ் உத்தியோகத்தரின் வழிப்பறி..! கிளிநொச்சியில் சம்பவம்…
பொலிஸ் உத்தியோகத்தரின் வழிப்பறி..! கிளிநொச்சியில் சம்பவம்...

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதானார்.
பூநகரி போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 16.11.2024 அன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் பலவந்தமாக லஞ்சம் பெற்றதை அடுத்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி கிளிநொச்சி மாவட்டஉதவி போலீஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார்.

அதற்கமைவாக பூநகரி சங்கப்பட்டி பாலத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போலீஸ் சாஜன் உத்தியோகத்தர் போலீஸ் உதவி அத்தியச்சகர் பிரிவினரால் பதினையாயிரத்துக்கும் மேற்பட்ட பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பொழுது 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.








