இலங்கை செய்திகள்

பொலிஸாரின் கொடூர தாக்குதல்..!நால்வர் பணி இடைநிறுத்தம்…

பொலிஸாரின் கொடூர தாக்குதல்..!நால்வர் பணி இடைநிறுத்தம்...

பொலிஸாரின் கொடூர தாக்குதலின் எதிரொலியாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பணியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் -சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின், கொடூர, தாக்குதல், இடைநிறுத்தம்

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் பொலிஸார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இவ்வாறான பின்னணியிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாக்கப்பட்டதாக கூறப்படும் காணொளி…

Back to top button