கலை, கலாசாரம்

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரன் !

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ பாராளுமன்ற தொகுதியில் இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தொழில் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொழில் கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி அமைக்கிறது. அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவர் உமா குமரன். இவரது பெற்றோர் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டனில் அவர்கள் குடியேறி உள்ளனர்.

அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.

, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரன் !

Back to top button