பெண் வேட்பாளர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவினர்.
முள்ளியவளை பொலிஸ் பிரிவில் சம்பவம்

பெண் வேட்பாளர் ஒருவருக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்
முள்ளியவளை பகுதியில் சம்பவம்
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பா பிளவு என்ற பிரதேசத்தில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் சமநிலம் கட்சி ஊடாக களமிறங்கி இருக்கும் பெண் வேட்பாளர் ஒருவர் அதாவது சிவனேஷ்வரி ஜீவா என்கின்ற பெண் வேட்பாளரின் வீட்டிற்கு சென்ற புலனாய்வாளர்கள் குறித்த பெண் வேட்பாளரை வலுக்கட்டாயமாக தான் குறித்த தேர்தலில் களமிறங்கி இருப்பதாக அந்த கட்சியினருக்கு எதிராக தூண்டும் விதத்தில் செயல்பட்டு கட்சி அந்த பெண் வேட்பாளரை வலுக்கட்டாயமாக இறக்கியதாக சந்தேகப்படுவதாக கேட்டு அந்த பெண் வேட்பாளரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
குறித்த பெண் வேட்பாளர் அது சம்பந்தமாக எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் தான் வந்து முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் இது பற்றி மேலும் தகவல் தேவை என்றால் நீங்கள் மாவட்ட அமைப்பாளரை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறி இருக்கின்றார்.
இருப்பினும் இந்த தேர்தலில் நீங்கள் களம் இறங்குவது பற்றி உங்களுக்கு அறிவுறுத்தப்படவும் இல்லை நீங்கள் எவ்வாறு தேர்தலிலே உங்களுக்கு தெரியாமல் களம் இறக்கப்பட முடியும் ஆகவே உங்களுக்காக நடவடிக்கை எடுக்க நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி குறித்த தேர்தலிலே வேட்பு மனு தாக்கல் பத்திரத்தில் பெண் வேட்பாளர் கையொப்பமிட்டு இருக்கும் நிலையில் இவ்வாறாக அவரை தூண்டி சம நிலம்கட்சிக்கு எதிராக புலனாய்வாளர்கள் எத்தனித்து வந்துள்ளனர் என்று தெரியவந்திருக்கின்றது.
இது சம்பந்தமாக கட்சியின் மேல் இடத்திற்கு அறிய படுத்திய குறித்த பெண் வேட்பாளர் சம்பந்தப்பட்ட விடயத்தை கட்சியின் தலைமையினூடாக பெப்ரல் திணைக்களத்திற்கு அறிவுறுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.









