புதிய மின்னணு அடையாள அட்டை விரைவில்: முதன்மை விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை !

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேவையான அளவு அட்டைகள் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ், நாளாந்தம் 1500க்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். போதிய அட்டைகள் இன்மையால் சேவைகளை பெற்றுக் கொள்ள செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில்,
வௌியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெறும் வாய்ப்பு இன்னும் உள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டிருந்த போதிலும்,பலரின்
வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை 30 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை, இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக அடையாள அட்டை கோரி விண்ணப்பிப்போருக்கு முதலில் புதிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தற்போது உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
, புதிய மின்னணு அடையாள அட்டை விரைவில்: முதன்மை விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை !









