கலை, கலாசாரம்

புதிய ஜனாதிபதி அநுரவின் செயலாளராக நந்திக குமநாயக்க நியமனம்!

[ad_1]

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, சுங்கத்துறையில் ஊழல் ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு அந்த ஆய்வுகள், சர்வதேச வெளியீடுகள் பலவற்றில் பிரசுரமாகயுள்ளன.

அவர் உலக சுங்க அமைப்பின் சுங்க நவீனமயமாக்கல் தொடர்பான பட்டய ஆலோசகர் என்பதோடு பணிவிணக்க மேம்பாடு தொடர்பான நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக சுங்க அமைப்பைப்  பிரதிநிதித்துவப்படுத்தி பல நாடுகளுக்கு விஜயம் செய்து  சுங்க இணக்க மேம்பாடு தொடர்பான பல நிகழ்வுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

மேலும், 1997 ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக சேவையில் இணைந்த அவர் இலங்கை சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

[ad_2]
Lankafire

Back to top button