பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு
பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு

பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு பிரான்ஸின் – டன்கிர்க் அருகே உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமிலும் அதைச் சுற்றியும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கிதாரி டன்கிர்க்கைச் சேர்ந்தவர் என்றும், மேலும் மூன்று துப்பாக்கிகளை தனது காரில் எடுத்துச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள் தொண்டு நிறுவனமான Care4Calais இன் கூற்றுப்படி, “இப்பகுதியில் பல ஆண்டுகளாக அகதிகள் முகாமிட்டுள்ளனர்.

இது ஆங்கில கால்வாயிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ளது. அங்கு உள்ளவர்கள் முக்கியமாக குர்திஷ் அல்லது ஆப்கானிஸ்தான் மற்றும் சிறு குழந்தைகளுடன் பல குடும்பங்களை உள்ளடக்கியவர்கள்” என தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் வொர்ம்ஹவுட் நகரில் பிற்பகல் 3 மணியளவில் துப்பாக்கிதாரி 29 வயதுடைய இளைஞரை முதலில் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் அவர் லூன்-பிளேஜ் அகதிகள் முகாமில் மேலும் நான்கு பேரைக் கொன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கிதாரியான 22 வயது இளைஞன் துப்பாக்கி சூட்டை நடத்தியதன் பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#FranceTamilNews








