கலை, கலாசாரம்

பிரசார நடவடிக்கைகளுக்கு விமானங்களை பயன்படுத்த கூடாது

[ad_1]

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு செலவில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

அரசாங்க விமானங்கள் தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் அல்லாத பிற கடமைகளுக்கு விமானங்களை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அரசாங்க விமானங்களை அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[ad_2]
Lankafire

Back to top button