
சுரேஷ் சலே எங்கே?
மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே என்றாலே கடந்த கால குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு இராணுவ அதிகாரி என்ற அறிமுகம் அனைவரும் அறிந்ததே.
இந்த இராணுவ அதிகாரி பெயரில் இருக்கும குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் விதத்தில் இவரது கடந்த கால கசப்பான உண்மை வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
இருந்தாலும் கூட இலங்கை பாதுகாப்பு துறைக்கு வெளிநாட்டு புலனாய்வாளர்கள் இராஜதந்திர ரீதியாக வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் கவணிக்க பட வேண்டிய அவசியம் குறித்து நடப்பு அரசு தவறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.
நாட்டில் தற்போது புதிய அரசியல் ரீதியான ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட அடிப்படை அரசியல் ரீதியான செயற்பாட்டில் மாற்றம் காண முடியாத நிலை காணப்படுகிறது. அதே நேரம் சர்வதேச அரசியல் ரீதியான அரசியல் காய் நகர்த்தல் மூலம் தன்னைத் தானே விடுவித்து கொள்ள கூடிய விதமாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் அளவுக்கு இன்னும் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் கூட முயற்சி நிலையில் தான் இருந்து வருகிறது.
சம நேரத்தில் இஸ்ரேலிய பலஸ்தீன் நாடுகளுக்கு இடையிலான வரலாற்று ரீதியான போராட்டம் தற்போது மூன்றாம் உலகப்போர் நோக்கி நகரும் விதத்தில் செயல்பட்டு வருகிறது என்பதை, சர்வதேச நாடுகள் அவையின் பாதுகாப்பு முறைமைகளை தயார் நிலையில் வைத்து இருப்பதை வைத்து ஊகிக்க முடிகிறது.
ஒருபுறம் சர்வதேச இராஜதந்திர ரீதியான அரசியல் காய் நகர்த்தல் மூலம் நிதி உதவி என்ற பெயரில் கடன் வழங்கும் முகாந்திரம் ஊடாக தொடர்ந்து சிக்கல் நிலையில் வைத்து கொள்ள துடிக்கும் பொருளாதார ரீதியான அரசியல் நகர்வுகளும், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகம் மூலமாக தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல கூடிய வகையில் இலகுவாக இருக்கும் பூகோள ரீதியாக இயற்கை அமைவிடத்தை கொண்டு இருக்கும் இலங்கை தீவை மத்திய கேந்திர நிலையமாக பயன் படுத்தி வரும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தக மாஃபியாக்களின் மறைமுக அனுசரணையுடன், அரசியல் ரீதியான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் நற்பு வட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள்,அரச உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள், பாதாள உலக கும்பல்கள். என்ற கருப்பு நிழல்கள் [Black Shadow’s] . என ஒரு தரப்பினரும்,
தற்போது இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில் இருந்து தங்களை கட்டமைத்து கொண்டு எதிர்பாராத விதமாக மீண்டும் தங்கள் அதிகார இருப்புக்காக எதையும் செய்ய துணிந்த அசுரர்களாக ஒருங்கிணைந்த நிலையில் தற்போது இருக்கும் நிலையில்.
எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற அடிப்படையில் இஸ்ரேலிய விரோத அமைப்புடன் ஒத்திசைவு காட்டும் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அடையாளம் காட்டப்படும் ISIS அமைப்பிற்கும் இலங்கையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் பதவிகள் வகிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து கடந்த காலத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இருந்து தெளிவாக தெரியவந்தது.
நடப்பு அரசு குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கவணம் செலுத்த ஆரம்பித்தது குறித்தும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இருந்தாலும் குறித்த குற்றம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் தற்போது வரை அரச பதவியை வகித்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தங்கள் தற்காப்பு நிலையைக் கருத்தில் கொண்டு எதையும் செய்ய துணிந்த இவர்களின் அடுத்த கட்ட நகர்வு இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே பூரணமாக செயல்பட்டு வருகின்றார்கள்.
இதிலும் பிரதானமாக இருக்கும் தொடர்பாளர்கள் தான் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோர்..
தற்போது இவர்கள் இருவரும் நாட்டில் இருந்து வெளியேறி இருந்தாலும் கூட அவர்கள் குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க தான் செய்கிறார்கள்.
குறிப்பாக ISIS அமைப்புடன் நெருங்கிய தொடர்பு பேணிய மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகமாக கறுப்பு பக்கங்கள் நிறைந்த வராக காணப்படுகிறார்.
அண்மையில் கூட நடப்பு அரசு மூலமாக சுரேஷ் சலே உயர் பதவி ஒன்றிற்கு அமர்த்தப்பட்டார் இருப்பினும் அவருக்கு எதிராக எழுந்த தொடர் குற்றச்சாட்டு மற்றும் அழுத்தம் காரணமாக பதவியை வேறு ஒருவருக்கு உடனடியாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் வழங்கிய சம்பவம் கூட நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக நாட்டில் இருந்து வெளியேறி விட்டார் இந்த சுரேஷ் சலே.
பணத்திற்காக தமிழ் மாணவர்களைக் கடத்திச் சென்று கொலை செய்து விட்டு தனது பதவியை காரணம் காட்டி தப்பித்து கடந்த கால அரசின் உயர் பதவி மூலமாக தனக்குத் தேவையான நபர்களை பாதுகாக்கவும் சுதந்திரமாக நடமாடும் வகையில் பக்கத் துணையாக செயலாற்றி வந்த இவரது குற்றங்கள் தொடர்பாக பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் எழுந்தன..
தற்போது நாட்டில் குறிப்பாக தென் இலங்கையில் அருகம்பை தாக்குதல் திட்டம் ஒன்று குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கூட குறித்த குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் முற்றுப் பெறாத நிலையில் இருந்து வருகிறது..
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய மக்களின் உயிர்களை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று வெளிநாட்டு புலனாய்வாளர்கள் தகவல் வழங்கி இருந்தாலும் அதற்கு ஆதரவு வழங்க கூடிய தொடர்பாளர்கள் குறித்த கவணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இருந்து பார்த்தால்.
அரசியல் ரீதியான செயற்பாட்டை மையப் படுத்திய வகையிலான வலையமைப்பு ஒன்றின் பின்புலம் குறித்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட கொலைக் குற்றவாளி பிள்ளையானுடன் இணைந்து ஒரு குடும்பத்தின் அரசியல் சுய இலாபத்துக்காக ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுக்கு உடந்தையாகவும் கைக்கூலியாகவும் தொழிற்பட்டுள்ளார் என்கின்ற விடயம் மிகவும் கேவலமானதும் மன்னிக்க முடியாததுமான தேசத்துரோக குற்றச்சாட்டாகும்.
அதன் அடிப்படையில் தான் குறித்த மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே பக்கம் கவணம் செலுத்த வேண்டிய தேவையை இந்த கட்டுரை மூலமாக லங்கா fire சுட்டி காட்டி நிற்கின்றது.
செனல் 4 ஆவணப்படத்தின் மூலம் தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேக்கு நீதி விசாரணையின் அடிப்படையில் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சார்ந்த சமூகமும் கூட அவருடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும்.
சர்வதேச நாடுகளின் உதவியுடன் சிவப்பு பட்டியலில் இடப்பட்டு உடனடியாக குறித்த இராணுவ அதிகாரி மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் இன்னும் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.
குறித்த தாக்குதல் சம்பவம் திட்டமிட்ட வகையில் வெற்றி பெறும் வகையில் நிகழ்த்த பட்டால் இலங்கையில் கூட கிறிஸ்தவ இஸ்லாமிய உறவுகள் சீர் குலைந்து போகும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது..
மனதளவில் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய இலங்கையர்கள் பாலஸ்தீனம் சார்ந்த ஆதரவையும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இலங்கையர்கள் இஸ்ரேலிய ஆதரவு நிலையிலும் இருந்து வரும் சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பின்புலத்தில் இருக்கும் முக்கியமான புள்ளி இந்த சுரேஷ் சலே தற்போது எங்கே? என்பதை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
இது குறித்த அதிக அளவில் கவணம் செலுத்த தவறினால் மேலும் பல்வேறு நெருக்கடி நிலையை நடப்பு அரசு சந்திக்க நேரிடும் என்பதை நினைவுறுத்துகிறோம்.
நன்றி










