கலை, கலாசாரம்

வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி ; வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கைது !


வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 40 இலட்சம் ரூபா பண மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

, வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி ; வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கைது !

Back to top button