கலை, கலாசாரம்
Trending

பாடசாலை மீதான மோசடி வேட்டையின் ஒரு பகுதி அம்பலம்.

வருடாந்த பொருட் கணக்கெடுப்பில் மோசடி அம்பலம்.

அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் பாடசாலை மீதான மோசடி வேட்டையின் ஒரு பகுதி அம்பலம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 01.01.2022 அன்று மறைமுக அரசியல் செல்வாக்கில் பதில் அதிபர் நியமனத்தில் பாடசாலையினை பொறுப்பேற்று அதிபராக கடமையாற்றும் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி,சொத்து மோசடிகள் நடைபெறுவதாக பாடசாலையில் அக்கறைசெலுத்தும் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் தற்காலத்தில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுயாதீன விசாரணைக்குழு.

பாடசாலையில் அக்கறை செலுத்தும் பல்வேறு தரப்பினர்களால் அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து ஜனாதிபதி செயலகம்,வடமாகாண ஆளுநர் செயலகம்,வடமாகாண பிரதம செயலாளர் செயலகம்,முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் என பல்வேறு பதவிநிலை உயர் பிரிவினருக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வெவ்வேறாக இரு சுயாதீன விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றங்கள் மற்றும் மோசடிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குற்றப்பத்திரமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தம்.

குறித்த அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் மோசடிகளை மறைத்து விசாரணையினை குழப்பும் முகமாக அரசியல் பிரமுகர் ஒருவரும் அவரது கட்சியும் இணைந்து உயர் அரசியல் அழுத்தங்கள் பிரயோகித்ததாகவும் குறித்த அரசியல் கட்சியினையும் அரசியல் பிரமுகராகிய முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரையும் மக்கள் இம் முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நிராகரித்துள்ளதுடன் அவர்கள் பல்வேறு செயற்பாடுகளை குழப்பியதாகவும் பல்வேறு தரப்பினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் காணாமல் போயுள்ள கணணி உதிரிப்பாகங்கள்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் மட்டும் பல கணணி உட் பாகங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதுடன் அவை ரூபா 903,100.00 பெறுமதி என வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

திரு.சின்னப்பா நாகேந்திரராசா அதிபராக கடமையாற்றிய அனைத்து பாடசாலைகளிலும் மோசடிகளா?

திரு சின்னப்பா நாகேந்திரராசா 2010 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் வேறு பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றிய காலத்தில் அபிவிருத்திச்சங்க கணக்குகளில் மறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.சின்னப்பா நாகேந்திரராசா துணுக்காய் கல்வி வலயத்திற்க உட்பட்ட கற்சிலைமடுவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் பாடசாலை அபிவிருத்திச்சங்க கணக்குகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலயக்கல்வி அலுவலக கணக்காளரால் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

வருடாந்த பொருட் கணக்கெடுப்பில் மோசடி அம்பலம்.

05.01.2012 ஆம் திகதி நடைபெற்ற 2011 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருட் கணக்கெடுப்பின் போது யுத்தத்தின் பின் 2010,2011 ஆண்டுகளில் பாடசாலை அபிவிருத்திச்சங்க கணக்கு நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில்
குறித்த முறைகேடுகள் தொடர்பில் குறித்த அதிபரிடம் பலமுறை விளக்கம் கேட்டும் சம்பளத்தினை இடைநிறுத்திய போதும் எதுவித பதில்களும் குறித்த அதிபரால் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கணக்கு நடவடிக்கைகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் 64 வது படைப்பிரிவின் பிரிகேடியர் அவர்களால் இவ் அதிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டதற்கமைவாக துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய (2012) திருமதி மாலினி வெனிற்ரன் அவர்களால் முறைகேடுகள் நடைபெற்றமைக்கான ஆவணங்கள்,அறிக்கைகள்,வலயத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பன மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் அரசியல் அழுத்தமா?

இவ் மோசடிகளை காப்பாற்றுவதற்காக 2012 காலப்பகுதியில் அமைச்சராக செயற்பட்ட ஒருவரை பயன்படுத்தி அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு மோசடிகள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மோசடிகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அழித்துள்ளாகவும் பிரசே மக்கள் குறிப்பிடுகின்றதுடன் குறித்த அதிபர் தற்காலத்தில் கடமையாற்றும் பாடசாலையில் ஏற்படுத்தப்பட்ட மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுத்த பாடசாலையில் அக்கறை செலுத்தும் தரப்பினரிடம் அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் மோசடிகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் குறித்த சின்ப்பா நாகேந்திரராசா அவர்கள் 2012 ஆம் ஆண்டு வேறு ஒரு பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய காலத்தில் செய்யப்பட்ட மோசடிகள் தொடர்பான அதாரங்கள் மற்றும் கடிதங்கள் தம்மிடம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமுகத்தின் பார்வை.

திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் அதிபராக கடமையாற்றும் அனைத்து பாடசாலைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி,சொத்து மோசடிகளுடன் தொடர்ந்தும் கடமையாற்றி அரச சொத்துக்களுக்கு நட்டங்களை ஏற்படுத்துவதால் குறித்த அதிபரை பணி நீக்கம் செய்வதுடன், இவரின் வருமானத்திற்கு மிகையான சொத்துக்களை இலங்கை அரசு பறிமுதல் செய்வதே பொருத்தம் எனதும் தற்காலத்தில் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் மோசடிகளுக்கு எதிரான சனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு குறித்த அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா அவர்களுக்கு எதிராக சிறந்த தண்டனையினை வழங்கி சின்னப்பா நாகேந்திரராசா போன்ற அனைத்து மோசடிகாரர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Back to top button