சபாநாயகருக்கு அறிவே கிடையாது..! பேராசிரியர் சர்ச்சை கருத்து…
சபாநாயகருக்கு அறிவே கிடையாது..! பேராசிரியர் சர்ச்சை கருத்து...

சபாநாயகருக்கு இருக்கக்கூடிய கல்வித்தகைமை தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.
தனது கல்வித் தகமை தொடர்பில் மெய்யான தகவல்களை வெளியிடத் தவறினால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டுமானால் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் தொடர்பில் தேடி அறிந்து, பிழையான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் அவரை பதவி விலகுமாறு வலியுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ரன்வல பிழை செய்திருந்தால் அதில் இரண்டு பிழைகள் உள்ளன.
இல்லாத பட்டமொன்று இருப்பதாக மக்களிடம் கூறியமை மற்றும் பொய்யான கல்வித் தகமைகயை காண்பித்து முக்கிய பதவி ஒன்றை வகிக்க முடியும் என கருதியமை ஆகிய இரண்டு பிழைகளை செய்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்திக்காக மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக ரன்வல தனது இளங்கலை பட்டத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும், கலாநிதி பட்டத்தை ஜப்பானிலும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.








