கலை, கலாசாரம்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் !

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் போதிய பணியாளர்கள் இல்லாததால் இதற்கு சில தடைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், அடுத்த மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 43,000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் !

Back to top button