கலை, கலாசாரம்

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் !

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் மீனவர்கள் மற்றும் கடற்சமூகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அலையின் உயரம் 2.5 – 3.5 மீற்றர் வரை எழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கற்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை கடந்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

, பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் !

Back to top button