கலை, கலாசாரம்

உலக நீரிழிவு தினம் ..! பரந்தனில் பரிசோதனை…

உலக நீரிழிவு தினம் ..! பரந்தனில் பரிசோதனை...

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நீரிழிவு நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கையினை பரந்தன் பகுதியில் கண்டாவளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

உலக, நீரிழிவு, தினம், பரிசோதனை

வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பேருந்துக்காக காத்து நின்ற பலரிடம் நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டது.இதன் மூலம் பல நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த பரிசோதனை மாவட்ட தொற்றா நோய்ப்பிரிவின் வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது .

எதிர்வரும் 15ம் திகதிவரை நீரிழிவு வாரமாக பிரகடனப்படுத்தி நோயாளர்கள் இனங்காணப்படவுள்ளனர்.குறிப்பாக கண்டாவளை வைத்திய அதிகாரி பிரிவில் குறித்த வாரத்தில் 8.30 மணி வரை மக்கள் பரிசோதனையை மேற்கொண்டு தமது நீரிழிவு நோய் நிலைமையை அறிந்து கொள்ள முடியும்.

Back to top button