
பரந்தனில் ஏற்பட்ட கோரவிப்பதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் போலீஸ் நிலையம் முன்பாக. இன்று18.11.2024 பரந்தன் பகுதியில் இருந்து புது குடியிருப்பு பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் குறுக்கே திரும்ப முற்பட்ட வேலை பரந்தன் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளன .

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தின் போதான காணொளி..!








