உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அமைப்புக்கள் இணைந்து பெரியகல்லாற்றில் மரநடுகை.
(ரவிப்ரியா)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பிரதேச
செயலகம் மற்றும் சமுர்த்தி அமைப்புக்கள் இணைந்து பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலய
வெளி
வீதியில் புதனன்று(05) காலை
பயன்தரு மரக்கன்றுகள் நடும்
நிகழ்வை மண்முனை தென்
எருவில் பிரதேச
செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் மற்றும் ஆலய
வண்ணக்கர் என்.கமல்ராஜ் இணைந்து ஆரம்பித்து வைததனர்.
இந்நிகழ்வில் கல்லாறு சமுர்த்தி வங்கிமுகாமையாளர் எஸ்.ரவீந்திரன், பகுதிக்கான கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி வெற்றிவேல் நியூனுகா, சமூக
அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.உதயசுதன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
, சமுர்த்தி பயனாளிகள் உட்பட
பலரும்
கலந்து
கொண்டனர்.
நிகழ்வை ஆரம்பித்த வைத்துப் பேசிய
பிரதேச
செயலாளர் இன்று
பூமியில் மாற்றம், காலநிலை மாற்றம், இயற்கை
அனர்த்தங்கள் காடழிப்பு என்பவற்றால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதை
எம்மால் அவதானிக்க முடிகின்றது. இது
வாழ்வதற்கான முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த பூமி
அனைத்து உயிர்
இனங்களுக்கும் சொந்தமானது. எனினும் சூழல்
மாற்றங்களினால் அனைத்து உயிர்
இனங்களும்களும் பாரிய
சவால்களை எதிர்
கொண்ட
வண்ணமே
இருக்கின்றன. எனவே
நாம்
உலக
சுற்றாடல் தினத்தை, உயிர்பல்வகமை தினம்
என்ற
தொனிப்
பொருளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
நாம் இவ்வாரம் முழுக்க அது
தொடர்பான நிகழ்வுகளை எமது
பிரதேச
மட்டத்தில் தொடர்ந்து செய்து
வருகின்றோம். அதன்
ஒரு
அங்கமாக இங்கு
பயன்தரும் மாங்கன்றுகளை நட்டு
இயற்கைச் செழிப்பை பேண
முயற்சிக்கின்றோம்.
எதிர்கால சந்ததிக்கு நாம்
நேர்த்தியான பூமியை
கையளிக்க வேண்டிய கடப்பாடுடன் உலக
சுற்றாடல் தின
நிகழ்வுகளை திட்டமிட்ட வகையில் பரவலாக
நடாத்திக் கொண்டிருக்கின்றோம். இதற்கு
பொதுமக்கள் பாரிய
பங்களிப்பு செய்ய
வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அமைப்புக்கள் இணைந்து பெரியகல்லாற்றில் மரநடுகை.








