கலை, கலாசாரம்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது !

அல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் பொது சுகாதார பரிசோதகரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து 2 துப்பாக்கிகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார பெப்ரவரி 26 ஆம் திகதி காலை சுட்டுக்கொல்லப்பட்டதுடன் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது !

Back to top button