கலை, கலாசாரம்

பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி 180,000 ரூபா மோசடி செய்த இருவர் கைது !

நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து பல்பொருள் விற்பனை நிலையமொன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி வங்கி கணக்கினை பெற்று 180,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கொம்பனி வீதி பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபரிகளிடமிருந்து 7 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 109 சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பிரதேசங்களில் நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி 180,000 ரூபா மோசடி செய்த இருவர் கைது !

Back to top button