இலங்கை செய்திகள்

நேர்முக பரீட்சைக்கு தோற்றாத தகுதியற்றவரை அதிபராக்கி நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இளங்கோவன்!

கொதிக்கும் பழைய மாணவர்கள்

நேர்முக பரீட்சைக்கு தோற்றாத தகுதியற்றவரை அதிபராக்கி நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இளங்கோவன்!

முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளராகவும் தற்போதய வடமாகாண பிரதம செயலாளராகவும் செயற்படும் இளங்கோவன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு நேர்முக பரீட்சைக்கு தோாற்றாத ஒருவருக்கு பதில் அதிபர் நியமனம் வழங்கி பாடசாலையின் பொறுப்புக்களை ஒப்படைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் நியமனம் கோரி வடமாகாண கல்வி அமைச்சினால் பத்திரிகை விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது.
நேர்முக பரீட்சைக்கு தோற்றாத திரு. சி. நாகேந்திரராசா அவர்களை முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இளங்கோவன் அவர்களால் பதில் நியமனம் வழங்கப்பட்டமை அதிகார துஸ்பிரயோகம் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றும் திரு. சி. நாகேந்திரராசா மீது பல்வேறு மோசடி குற்றங்கள் உள்ளதுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் சனாதிபதி அலுவலகம், ஆளுநர் செயலகம், மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு என பல்வேறு தரப்பினருக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து பிரதம செயலாளர் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சுயாதீன விசாரணைக் குழுவும் வடமாகாண கல்வி அமைச்சினால் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் தலைமையிலான சுயாதீன விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் நடைபெற்று குற்றங்கள் மற்றும் மோசடிகள் இனங்கானப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல்செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்திய உள்ளக தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

அத்துடன் சனாதிபதி அவலுவலகத்தினால் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் தொடர்பான விசாரணை அறிக்கையின் சமர்ப்பிக்குமாறு மத்திய கல்வி அமைச்சிற்கும் கட்டளைகள் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களின் தகுதியற்றவருக்கான அதிபர் நியமனத்தினால் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான அசையும் அசையா சொத்துக்கள் அதிபரால் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் துணுக்காய் வலயக்கல்லிப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் அவர்களால் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தில் அதிபர் திரு. சி. நாகேந்திரராசா அவர்களால் மாணவர்களது கல்வி, ஒழுக்கம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் பாதிப்படைவதாகவும் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டில் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளதுடன் இப் பாடசாலை 1AB பாடசாலையாகவும் SLPS 2 தர அதிபர் கடமையாற்றுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இவ் அதிபர் மீது தன்னால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான அறுவுறுத்தல்களையும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட வலயமட்ட கணனி ஆய்வுகூட மேற்பார்வை அறிக்கையில் கணனி ஆய்வுகூடம் சீரான பராமரிப்பில் இல்லை எனவும் பழுதடைந்த கணணிகள் பதிவளிக்கப்படாததுடன் கணனிகளில் உதிரிப்பாகங்களில் 15 RAM உட்பட பல பாகங்கள் இல்லை எனவும் கணனி ஆய்வுகூட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றும் திரு. சி. நாகேந்திரராசா மீது பல்வேறு மோசடி குற்றங்கள் எழுந்துள்ளன. இவர் கடமையாற்றிய முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு முத்தஜன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பல கோடி ரூபா பெறுமதியான அசையும் அசையா சொத்துக்கள் மோசடியில் மறைமுக அரசியல் செல்வாக்கில் குற்றங்கள் மறைக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அசையும் அசையா சொத்துக்களில் மோசடியில் திரு. சி. நாகேந்திரராசா அவர்களின் நண்பனாகிய முன்னால் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பயன்படுத்தி அரசியல் அழுத்தம் வழங்கியதாகவும் அதிபர் திரு. சி. நாகேந்திரராசா, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர், அவரது சகோதரனாகிய தற்போதய யாழ் பல்களைக்களக விரிவுரையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் மற்றும் ஒட்டுசுட்டால் தபால் ஊழியர் ஆகியோருடன் வடமாகாண மாகாணக் கல்விப் பணிப்பாளர் (முன்னால்) யோன் குயின்ரஸ் ஆகியேரை சந்தித்து அதிபர் திரு. சி. நாகேந்திரராசா மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் எனவும் மோசடி செய்யப்பட்ட அசையும் அசையா சொத்துக்களின் பெறுமதியினை மீள செலுத்துவதாகவும் உயர் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னால் கல்வி அமைச்சின் செயாளராக கடமையாற்றிய இளங்கோவன் அவர்களால் நேர்மையாக செயற்பட்டு பாடசாலைகளுக்கான அதிபர் நியனம் நேர்மையாக நடைபெறவில்லை எனவும் அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பக்கச்சார்பாகவே நியமனம் வழங்கப்பட்டதாகவும், இவ்வாறு பக்கச்சார்பான நியமனங்களால் அரச சொத்துக்கள் தொடர் மேசடிகள் செய்யப்படுவதாகவும் மாணவர்களது எதிர்காலம் சீரளிந்து செல்வதாகவும் பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இளங்கோவன் தற்போது வடமாகாண பிரத செயலாளராக உள்ளமையால் தன்னால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான நியமனத்திற்கும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரின் மோசடிகளுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புவதாக பாடசாலை நலன்சார்ந்து செயற்படும் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Back to top button