நேரலையில் அடிதடியில் இறங்கிய மலையக தமிழ்எம்.பிக்கள் இருவர்

[ad_1]
மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே கைகலப்பு ஏற்பட்டது.
தொலைக்காட் சி நேரல்லையில் இருவரும் இங்கிதம் மறந்து மோதிக்கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் இடையே தற்போது கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் நிகழ்ச்சியின் விவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.
எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்தனர்.
இந்நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கடந்த 15ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலு குமார் தெரிவித்திருந்தார்.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்.
இவ்வாறு இருக்க நியூஸ்ஃபெஸ்ட் சமர் நிகழ்ச்சியில் எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகிய இருவருக்கிடையில் இடம்பெற்ற கட்சித்தாவல் தொடர்பிலான கருத்து மோதல் இறுதியில் கைகலப்பாக மாறியது.
[ad_2]Lankafire








