கலை, கலாசாரம்

நாட்டில் இன்றிரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்!

[ad_1]

நாட்டில் 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த விடயம் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது அமைதியான சூழல் நிலவினாலும் மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் மக்களை தங்களது இருப்பிடங்களிலேயே நேரத்தை செலவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர் தங்களது நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அல்லது கடிதத்தை ஊரடங்கு கால பிரவேச ஆவணமாக பயன்படுத்த முடியும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
[ad_2]
Lankafire

Back to top button