நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை !

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை :
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதன்படி, களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
, நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை !









